ஆடி கிருத்திகை: அரக்கோணம்- திருத்தணி இடையே சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கம்

ஆடி கிருத்திகையையொட்டி அரக்கோணம்- திருத்தணி இடையே சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன.;

Update:2025-08-14 07:56 IST

சென்னை,

திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழாவையொட்டி அரக்கோணம்-திருத்தணி இடையே இன்று (வியாழக்கிழமை) முதல் வரும் 18-ந்தேதி வரையில் 5 நாட்கள் சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அரக்கோணத்தில் இருந்து காலை 10.20 மணிக்கு புறப்பட்டு திருத்தணி செல்லும் சிறப்பு மின்சார ரெயில் காலை 10.40 மணிக்கு திருத்தணி சென்றடையும். மறுமார்க்கமாக, திருத்தணியில் இருந்து காலை 10.50 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் சிறப்பு மின்சார ரெயில் காலை 11.10 மணிக்கு அரக்கோணம் சென்றடையும்.

அரக்கோணத்தில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு திருத்தணி செல்லும் சிறப்பு மின்சார ரெயில் மதியம் 1.20 மணிக்கு திருத்தணி சென்றடையும். மறுமார்க்கமாக, திருத்தணியில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் சிறப்பு மின்சார ரெயில் மதியம் 1.48 மணிக்கு அரக்கோணம் சென்றடையும்.

அரக்கோணத்தில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு திருத்தணி செல்லும் சிறப்பு மின்சார ரெயில் மாலை 3.10 மணிக்கு திருத்தணி சென்றடையும். மறுமார்க்கமாக, திருத்தணியில் இருந்து மாலை 3.20 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் சிறப்பு மின்சார ரெயில் மாலை 3.38 மணிக்கு அரக்கோணம் சென்றடையும். தினந்தோறும் இருமார்க்கமாக 6 சிறப்பு மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்