கடந்த 5 ஆண்டுகளில் 100 நாள் வேலை திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு சரிவு - அறிக்கையில் தகவல்

பட்ஜெட் மதிப்பீடு அதிகரித்தபோதும் அரசின் நிதி ஒதுக்கீடு படிப்படியாக சரிந்து வருவது கண்டறியப்பட்டு உள்ளது.;

Update:2025-07-26 10:11 IST

புதுடெல்லி,

100 நாள் வேலை திட்டத்துக்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறித்த உறுப்பினர்களின் கேள்விக்கு நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை இணை மந்திரி கமலேஷ் பஸ்வான் எழுத்து மூலம் பதிலளித்தார்.

அந்த அறிக்கையில், கடந்த 5 ஆண்டுகளில் இந்த திட்டத்துக்கு பட்ஜெட் மதிப்பீடு படிப்படியாக அதிகரித்து இருந்தது. அதேநேரம் அரசின் நிதி ஒதுக்கீடு சரிந்து வருவது கண்டறியப்பட்டு உள்ளது. கொரோனா ஊரடங்கால் 2020-21-ம் நிதியாண்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊரில் இருந்ததால் இந்த திட்டத்துக்காக ரூ.1.11 லட்சம் கோடி விடுவிக்கப்பட்டு உள்ளது. அந்த ஆண்டு பட்ஜெட் மதிப்பீடு ரூ.61,500 கோடியாக இருந்தது.

பின்னர் 2021-22-ல் விடுவிக்கப்பட்ட தொகை ரூ.98,467.85 கோடி (பட்ஜெட் மதிப்பீடு ரூ.73,000 கோடி) என குறைந்தது. அடுத்த ஆண்டில் ரூ.90,810.99 கோடியாகவும் (பட்ஜெட் மதிப்பீடு ரூ.73,000 கோடி), 2023-24-ல் ரூ.88,268.30 கோடியாகவும் ((பட்ஜெட் மதிப்பீடு ரூ.60,000 கோடி) சரிந்தது. இது 2024-25-ல் ரூ.85,838.76 கோடியாக சரிந்துள்ளது. இந்த ஆண்டின் பட்ஜெட் மதிப்பீடு ரூ.86,000 கோடியாகும்.

இவ்வாறு பட்ஜெட் மதிப்பீடு அதிகரித்த போதும் அரசின் நிதி ஒதுக்கீடு படிப்படியாக சரிந்து வருவது இதன் மூலம் கண்டறியப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்