கிராம உதவியாளர் வேலை...திண்டுக்கல் மாவட்டத்தில் 16 பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி?
திண்டுக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள 16 கிராம உதவியாளர் பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.;
திண்டுக்கல்,
தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 2.299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி, மாவட்ட வாரியாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள 16 கிராம உதவியாளர் பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியியிடப்பட்டுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:
பணியிடங்கள் விவரம்: நிலக்கோட்டை தாலுகா - 11, திண்டுக்கல் கிழக்கு வட்டம்: 03, வேடசந்தூர் -03 என மொத்தம் 16 காலிப்பணியிடங்கள் உள்ளன.
சம்பளம்: ரூ. 11,100 – 35100/-
கல்வி தகுதி; குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு படித்து இருக்க வேண்டும். தோல்வி அடைந்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 21 வயது முதல் 32 வரை, பிசி/எம்பிசி உள்ளிட்ட பிரிவினர் 37 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
இதர தகுதிகள்; விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் வட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். காலிப்பணியிடம் உள்ள கிராமத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு கூடுதலாக 5 மதிப்பெண்கள் அளிக்கப்படும். தமிழில் பிழையின்றி எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்களை திண்டுக்கல் மாவட்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களுடன் இருப்பிட சான்றிதழ், சாதி சான்றிதழ், கல்வி சான்றிதழ் நகல்களை கட்டாயம் இணைக்க வேண்டும். வட்டாட்சியர் அலுவலகத்திற்கு தபாலிலோ அல்லது நேரிலோ விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை: எழுத்து திறன் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
குறிப்பு: அதிகாரப்பூர்வ அறிவிப்பில் எந்தெந்த கிராமங்களில் காலிப்பணியிடங்கள் உள்ளன என்ற விவரம் இடம் பெற்றுள்ளன. அதை தெரிந்து கொண்ட பின்னர் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை டவுன்லோடு செய்ய: https://dindigul.nic.in/