புதிதாக 20 ஆயிரம் பேரை பணியில் அமர்த்த இன்போசிஸ் திட்டம்
இந்த நிதியாண்டுக்குள் புதிதாக 20 ஆயிரம் பேரை பணியில் அமர்த்த இன்போசிஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.;
பெங்களூரு,
பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதுமுள்ள பெருநகரங்களில் இயங்கி வரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக இன்போசிஸ் உள்ளது. இந்தநிலையில் புதிய நிதியாண்டின் (2025-26) முதல் காலாண்டுக்கான (ஏப்ரல்-ஜூன்) நிதியறிக்கையை இன்போசிஸ் வெளியிட்டுள்ளது.
இதில் கடந்த காலாண்டில் மட்டும் நிறுவனத்தின் நிகர லாபம் 8.7 சதவீதம் உயர்ந்து ரூ.6 ஆயிரத்து 921 கோடியாகவும், நிறுவனத்தின் மொத்த வருவாய் 7.5 சதவீதம் உயர்ந்து ரூ.42 ஆயிரத்து 279 கோடியாகவும் உள்ளது. நிறுவனத்தில் 3 லட்சத்து 24 ஆயிரம் பேர் பணிபுரிந்து வரும் நிலையில் இந்த நிதியாண்டுக்குள் புதிதாக 20 ஆயிரம் பேரை பணியில் அமர்த்தவும் திட்டமிட்டுள்ளது.