முதுகலை ஆசிரியர் உள்ளிட்ட தேர்வுகள் ஒத்திவைப்பு - ஆசிரியர் தேர்வு வாரியம்
அக்டோபர் 12ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.;
சென்னை,
முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1, கணினி பயிற்றுநர் நிலை-1 தேர்வு செப்டம்பர் 28ல் நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1, கணினி பயிற்றுநர் நிலை-1 பணியிடங்களுக்காக தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அன்றைய தினம் (28-ந்தேதி) டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு நடைபெற உள்ளதால் தேர்வு தேதி அக்டோபர் 12ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.