எய்ம்ஸ் மருத்துவமனைகளில் வேலை: 3,496 பணியிடங்கள்- விண்ணப்பிப்பது எப்படி?
எய்ம்ஸ் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.;
representation image (Meta AI)
சென்னை,
எய்ம்ஸ் எனப்படும் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் அமைந்துள்ளது. டெல்லி, பாட்னா உள்பட நாட்டின் பல்வேறு நகரங்களில் அமைந்து இருக்க கூடிய எய்ம்ஸ் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'எய்ம்ஸ்', ஜிப்மர், இ.எஸ்.ஐ., உள்ளிட்ட மருத்துவமனைகளில் காலியிடங்கள் உள்ளன.
பணியிடங்கள்: நிர்வாக அதிகாரி, அலுவலக உதவியாளர், கிளார்க், அசிஸ்டென்ட் இன்ஜினியர், எலக்ட்ரீசியன், பார்மசிஸ்ட், கேஷியர், மெக்கானிக், நுாலக உதவியாளர், பிசியோ தெரபிஸ்ட் உள்ளிட்ட பணியிடங்கள் உள்ளன.
வயது வரம்பு: வயது, கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும். அதிகபட்சமாக 43 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 3,000 செலுத்த வேண்டும்: எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 2,400 மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்க கடைசிநாள்: 31.7.2025
கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள : https://rrp.aiimsexams.ac.in/