சர்ச்சை பேச்சு: வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு மாநில தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு

தவெக சார்பில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.;

Update:2025-07-16 19:54 IST

அரசு பொதுத்தேர்வுகளில் சாதித்த மாணவ, மாணவிகளுக்கு அக்கட்சி தலைவர் நடிகர் விஜய் பரிசுகளை வழங்கி பாராட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், விஜய் கல்வி விருது வழங்கும் விழாவில் விஜய், மாணவிகளின் தோளில் கை போட்டதை தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் விமர்சித்து பேசினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் வேல்முருகன் பேச்சுக்கு தவெகவினர் உள்பட பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக தவெக சார்பில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகார் மீது விசாரணை நடத்திய தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க மாநில தேர்தல் அதிகாரிக்கு பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரை நேற்று செய்யப்பட்டது.

இந்த நிலையில், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் பரிந்துரையை தொடர்ந்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சார்பில் மாநில டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இது வேல்முருகனுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்