சென்னையில் 6 வார்டுகளில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று 6 வார்டுகளில் நடைபெறுகிறது.;
சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று (07.08.2025) தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு-42ல் இளையா தெருவில் உள்ள கே.சி.எஸ். நாடார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ராயபுரம் மண்டலம், வார்டு-51ல் காளிங்கராயன் தெருவில் உள்ள அண்ணா திருமண மண்டபம், திரு.வி.க. நகர் மண்டலம், வார்டு-73ல் ஸ்டாரஹன்ஸ் சாலையில் உள்ள திரு.வி.க. நகர் மண்டல அலுவலகம், தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-120ல் வி.பி. ராமன் சாலை, லாயட்ஸ் காலனியில் உள்ள ஐ.டி.ஐ. கல்லூரி, அடையாறு மண்டலம், வார்டு-172ல் நெடுஞ்செழியன் தெருவில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி விளையாட்டு திடல், சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு-200, செம்மஞ்சேரி, பழத்தோட்ட சாலையில் உள்ள மாநகராட்சி சமூகநல கூடம் ஆகிய 6 வார்டுகளில் நடைபெறவுள்ளது.
இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.