மணமகளுக்கு இலவச பட்டுச்சேலை: எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதி

ஏழை நெசவாளர்களுக்கு மீண்டும் பசுமை வீடுகள் கட்டித்தரப்படும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.;

Update:2025-07-22 18:36 IST

கும்பகோணம்,

கும்பகோணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கைத்தறி நெசவு தொழிலாளர்களை சந்தித்து கலந்துரையாடினார். அப்போது அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

கும்பகோணம் பகுதியில் காலம் காலமாக பட்டு நெசவுத்தொழில் நடைபெற்று வருகிறது. அதிமுக ஆட்சியில் நெசவாளர்கள் நலன் காக்கப்பட்டது. அவர்களுக்கு அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியது. ஆனால் தற்போது கைத்தறி நெசவு தொழில் நலிவடைந்து விட்டதாக தெரிவித்தீர்கள்.

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் அரசின் தாலிக்கு தங்கம் திட்டத்தில் மணமகளுக்கு இலவசமாக பட்டுப்புடவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஏழை நெசவாளர்களுக்கு மீண்டும் பசுமை வீடுகள் கட்டித்தரப்படும் அன்று நெய்யப்படும் துணிகளுக்கு அன்றே கூலி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நெசவாளர்கள் தங்கள் மேம்படுத்தி கொண்டு தொழில் செய்ய அரசு சார்பில் தேவையான உதவிகள் செய்யப்படும். தாங்கள் என்னிடம் வைத்த கோரிக்கைகள் குறித்து பரிசிலினை செய்து அதிமுக ஆட்சி அமைந்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்