திமுக எம்.பி.க்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

எதிர்க்கட்சிகளும் நாடாளுமன்றத்தில் பல்வேறு பிரச்சினைகளை கிளப்ப தயாராகி வருகின்றன.;

Update:2025-07-18 11:18 IST

சென்னை ,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 21-ந் தேதி தொடங்குகிறது. அடுத்த மாதம் (ஆகஸ்டு) 21-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை உள்ளிட்டவை குறித்த எதிர்க்கட்சிகளின் சந்தேகங்கள் பெரிய அளவில் எதிரொலிக்கும் என்று தெரிகிறது.மேலும் இந்த தொடரில் மொத்தம் 21 அமர்வுகளுக்கு திட்டமிடப்பட்டு உள்ளது. ரக்ஷா பந்தன் மற்றும் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்காக இடையில் ஆகஸ்டு 12 முதல் 18-ந் தேதி வரை நாடாளுமன்ற தொடருக்கு இடைவெளி விடப்படுகிறது.பரபரப்பான சூழலில் நடைபெற உள்ள இந்த தொடரில் பல்வேறு முக்கியமான சட்ட அலுவல்களை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. குறிப்பாக 8 புதிய மசோதாக்களை இந்த தொடரில் அறிமுகம் செய்ய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏராளமான சட்ட நடவடிக்கைகளுக்கு அரசு தயாராகி வரும் நிலையில், எதிர்க்கட்சிகளும் நாடாளுமன்றத்தில் பல்வேறு பிரச்சினைகளை கிளப்ப தயாராகி வருகின்றன.

இந்த நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடர்பாக திமுக எம்.பி.க்களுடன் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார்.இந்த ஆலோசனையில் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எவ்வாறு செயல்பட வேண்டும் என எம்.பி.க்களுக்கு மு.க. ஸ்டாலின் அறிவுறுத்த்தியுள்ளார் . மேலும் தமிழ்நாட்டிற்கான திட்டங்கள்,  நிதி குறித்து கேள்வி எழுப்புவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது . 

இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக அரசின் வஞ்சகத்தை நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்து, தமிழ்நாட்டுக்கான கல்வி-நிதி உரிமைகளை நிலைநாட்டுவோம் . தமிழ்நாட்டின் நிதியுரிமை, மொழியுரிமை, கல்வியுரிமைக்காக நாடாளுமன்றத்தில் திமுக உரக்க குரல் எழுப்பும் உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன 

Tags:    

மேலும் செய்திகள்