திருச்சி வழியாக செல்லும் ரெயில்கள் சேவையில் மாற்றம்
பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி வழியாக செல்லும் ரெயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.;
திருச்சி,
தெற்கு ரெயில்வேயின் திருச்சி, மதுரை, திருவனந்தபுரம் கோட்டத்துக்குட்பட்ட பல்வேறு இடங்களில் ரெயில்வே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக ரெயில் போக்குவரத்து சேவையில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
* திருச்சி ரெயில் நிலையத்தில் இருந்து காலை 8.35 மணிக்கு புறப்படும் திருச்சி - காரைக்கால் டெமு ரெயில் (எண்:76820) நாளை (புதன்கிழமை) முதல் 23-ந்தேதி வரை (19-ந்தேதி தவிர) திருச்சியில் இருந்து திருவாரூர் வரை மட்டும் இயங்கும்.
காரைக்கால்-திருச்சி டெமு ரெயில்
* காரைக்கால் - திருச்சி டெமு ரெயில் (எண்:76819) நாளை (புதன்கிழமை) முதல் 23-ந்தேதி வரை (19-ந்தேதி தவிர) திருவாரூரில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு திருச்சி வந்தடையும். காரைக்காலில் இருந்து புறப்படாது.
* திருச்சி-சென்னை எழும்பூர் சோழன் எக்ஸ்பிரஸ் (எண்:22676) திருச்சியில் இருந்து வருகிற 20-ந்தேதி காலை 11 மணிக்கு பதிலாக 12.45 மணிக்கு புறப்படும்.
* குருவாயூர்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (எண்:16128) நாளை மற்றும் வருகிற 20-ந்தேதி தகுந்த இடங்களில் 30 நிமிடம் நின்று தாமதமாக செல்லும்.
* திருச்சியில் இருந்து காலை 7.05 மணிக்கு புறப்படும் திருச்சி - ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்: 16849) வருகிற 18-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை திருச்சியில் இருந்து மானாமதுரை வரை மட்டும் இயங்கும். மறுமார்க்கத்தில் ராமேசுவரம் - திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்:16850) வருகிற 18-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை மானாமதுரையில் இருந்து மாலை 4.55 மணிக்கு திருச்சிக்கு புறப்படும்.
மயிலாடுதுறை - செங்கோட்டை
* மயிலாடுதுறையில் இருந்து மதியம் 12.10 மணிக்கு புறப்படும் மயிலாடுதுறை - செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்:16847) வருகிற 17 மற்றும் 20-ந்தேதிகளில் மாற்றுப்பாதையில் திருச்சியில் இருந்து புதுக்கோட்டை, காரைக்குடி, தேவகோட்டை ரோடு, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை வழியாக விருதுநகர் சென்று செங்கோட்டைக்கு செல்லும். மணப்பாறை, வையம்பட்டி, வடமதுரை, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், கல்லிக்குடி வழியாக செல்லாது. மறுமார்க்கத்தில் செங்கோட்டையில் இருந்து மயிலாடுதுறைசெல்லும் ரெயில் வருகிற 14-ந்தேதி, 16-ந்தேதி, 18-ந்தேதி, 19-ந்தேதி, 20-ந்தேதி ஆகிய நாட்களில் விருதுநகரில் இருந்து மானாமதுரை வழியாக திருச்சிக்கு வந்து செல்லும்.