எலான் மஸ்க்கின் 'ஸ்டார்லிங்க்'கால் பி.எஸ்.என்.எல்-லுக்கு பாதிப்பா?
இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.;
உலக பணக்காரர்களில் ஒருவரும், பெரும் தொழிலதிபருமானவர் எலான் மஸ்க். ஸ்டார்லிங்க் என்னும் தொலைதொடர்பு சேவை நிறுவனத்தை தொடங்கி அதிவேக இணைய வசதியை பெறும் வசதியை அளித்து வருகிறார். இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இது இந்திய நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் ஸ்டார்லிங்க் நுழைய இருப்பது, அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல்.-லுக்கு அச்சுறுத்தலாக இருக்காது என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பி.எஸ்.என்.எல். கிராமப்புறங்கள் மற்றும் தொலைதூர பகுதிகளில் தரைவழி நெட்வொர்க் மூலம் மக்களுக்கு சேவையை வழங்குகிறது. அதே சமயம், ஸ்டார்லிங்க் உயர்விலை கொண்ட செயற்கைகோள் இணைய சேவையை மட்டுமே வழங்கும் என்பதால், வெவ்வேறு வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டுள்ளன என விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.