ஏலத்துக்கு வரும் 10 ஆயிரம் ரூபாய் நோட்டு ஜனாதிபதி அலுவலகம் ஏற்பாடு
ஏலம் ஆகஸ்டு 31-ந்தேதி முடிவடையும் என்றும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்து உள்ளது.;
புதுடெல்லி,
இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் அவருக்கு முன்பு இருந்த ஜனாதிபதிகளால் பரிசாக பெறப்பட்ட 250-க்கும் மேற்பட்ட பொருட்கள், ஜனாதிபதி அலுவலகத்தால் ஏலம் விடப்படுகிறது. அவற்றில் தேசிய சின்ன நினைவு பரிசு, ஒற்றுமை சிலையின் மாதிரி, தாய் மூர்த்தி கருவிப்பெட்டி, பழமையான கடிகாரம், ரூ.10 ஆயிரம் ரூபாய்த்தாள் மாதிரி உள்ளிட்ட அரிய பொக்கிஷ பொருட்கள் அடங்கி உள்ளன.
இதற்கான மின்னணு ஏலம் தற்போது நடைபெற்று வருவதாகவும், இது ஆகஸ்டு 31-ந்தேதி முடிவடையும் என்றும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்து உள்ளது.
இவற்றை ஏலம் விடுவதன் மூலம் கிடைக்கும் வருவாய், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோருக்கு அதிகாரமளித்தலை நோக்கமாகக் கொண்ட திட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட உள்ளது.