தொடர்ந்து சரிவை சந்திக்கும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
தங்கம் விலை தொடர்ந்து 6வது நாளாக இன்றும் சரிவை சந்தித்துள்ளது.;
சென்னை,
தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இதன்படி, கடந்த 6-ந் தேதி ஒரு பவுன் ரூ.75 ஆயிரத்தை தாண்டியது. கடந்த மாதம் (ஜூலை) 23-ந் தேதிக்கு பிறகு விலை சரிவடைந்து வந்த நிலையில் மீண்டும் இந்த உச்சத்தை தொட்டது. அதன் தொடர்ச்சியாகவும் விலை குறைந்தபாடில்லை.
மீண்டும் ஏறுமுகத்திலேயே பயணித்தது. இதனால் கடந்த 8-ந் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.75,760-க்கு விற்பனையாகி இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்தது. இதனைத் தொடர்ந்து விலை சற்று குறையத் தொடங்கியது. இதன்படி கடந்த 5 நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்தது.
நேற்று முன்தினம் தங்கம் கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.9,290க்கும், சவரனுக்கு ரூ.40 மட்டும் குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.74,320க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 126 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 1,26,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய தினம் தங்கம் விலையில் இன்று மாற்றம் எதுவும் இல்லாமல் இருந்தது. இதன்படி தங்கம் ஒரு கிராம் ரூ.9,290க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.74,320க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 127க்கும், ஒரு கிலோ வெள்ளி 1,27,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் 6வது நாளாக இன்றும் தங்கம் விலை இறங்கு முகத்திலேயே தொடர்ந்து வருகிறது. அதன்படி இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,280க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.74,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் 127 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 1,27,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-
15.08.2025 - ஒரு சவரன் ரூ.74,240 (இன்று)
14.08.2025 - ஒரு சவரன் ரூ.74,320 (நேற்று)
13.08.2025 - ஒரு சவரன் ரூ.74,320
12.08.2025 - ஒரு சவரன் ரூ.74,360
11.08.2025 - ஒரு சவரன் ரூ.75,000
10.08.2025 - ஒரு சவரன் ரூ.75,560