மேலும் குறைந்த தங்கம் விலை: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி.. இன்றைய நிலவரம் என்ன..?

தங்கம் விலை தொடர்ந்து 7வது நாளாக இன்றும் (சனிக்கிழமை) சரிவை சந்தித்துள்ளது.;

Update:2025-08-16 10:01 IST

சென்னை,

தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இதன்படி, கடந்த 6-ந் தேதி ஒரு பவுன் ரூ.75 ஆயிரத்தை தாண்டியது. கடந்த மாதம் (ஜூலை) 23-ந் தேதிக்கு பிறகு விலை சரிவடைந்து வந்த நிலையில் மீண்டும் இந்த உச்சத்தை தொட்டது. அதன் தொடர்ச்சியாகவும் விலை குறைந்தபாடில்லை.மீண்டும் ஏறுமுகத்திலேயே பயணித்தது.

இதனால் கடந்த 8-ந் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.75,760-க்கு விற்பனையாகி இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்தது. இதனைத் தொடர்ந்து விலை அதிரடியாக குறையத் தொடங்கியது.

இந்நிலையில் 7வது நாளாக இன்றும் தங்கம் விலை இறங்கு முகத்திலேயே தொடர்ந்து காணப்படுகிறது. அதன்படி இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,275க்கும், சவரனுக்கு ரூ.40 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.74,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் 127 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 1,27,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

16.08.2025 - ஒரு சவரன் ரூ.74,200 (இன்று)

15.08.2025 - ஒரு சவரன் ரூ.74,240 (நேற்று)

14.08.2025 - ஒரு சவரன் ரூ.74,320

13.08.2025 - ஒரு சவரன் ரூ.74,320

12.08.2025 - ஒரு சவரன் ரூ.74,360

11.08.2025 - ஒரு சவரன் ரூ.75,000

10.08.2025 - ஒரு சவரன் ரூ.75,560

Tags:    

மேலும் செய்திகள்