தங்கம் விலை அதிரடியாக சரிவு: நகை பிரியர்கள் நிம்மதி -இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை ஒரு கிராம் ரூ.70 குறைந்து ரூ.9,375 க்கு விற்பனை செய்யப்படுகிறது.;

Update:2025-08-11 09:50 IST

சென்னை,

தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. சான் ஏறி முழம் சறுக்கும் என்று பழமொழி ஒன்று சொல்வார்களே, அதற்கு எதிர்மாறாக தங்கம் விலை முழம் ஏறி, சான் சறுக்கிறது என்றே சொல்லலாம். அதாவது, விலை ஏறும்போது அதிகமாக ஏறுகிறது. ஆனால், குறையும்போது சற்றே விலை குறைகிறது. இதுதான் தங்கம் விலையில் தொடர் கதையாக நடக்கிறது.

நேற்று முன்தினம் ஒரு பவுன் தங்கம் விலை ரூ.75 ஆயிரத்து 560-க்கும், ஒரு கிராம் ரூ.9,445-க்கும் விற்பனை ஆனது. இந்த நிலையில், இன்று காலை தங்கம் விலை பவுனுக்கு ரூ.560 குறைந்து, ஒரு பவுன் ரூ.75 ஆயிரத்திற்கும், ஒரு கிராம் ரூ.9,375-க்கும் விற்பனை ஆனது. அதே நேரத்தில், வெள்ளி விலை கடந்த 7-ந் தேதி முதல் ஒரு கிராம் ரூ.127 என்ற நிலையிலேயே தொடர்கிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 27 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது.

கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்

10.08.2025 - ஒரு சவரன் ரூ.75,560 (நேற்று)

09.08.2025 - ஒரு சவரன் ரூ.75,560

08.08.2025 - ஒரு சவரன் ரூ.75,760

07.08.2025 - ஒரு சவரன் ரூ.75,200

06.08.2025 - ஒரு சவரன் ரூ. 75,040

05.08.2025 - ஒரு சவரன் ரூ.74,960

04.08.2025 - ஒரு சவரன் ரூ.74,360

03.08.2025 - ஒரு சவரன் ரூ.74,320

02.08.2025 - ஒரு சவரன் ரூ.74,320

01.08.2025 - ஒரு சவரன் ரூ.73,200

31.07.2025 - ஒரு சவரன் ரூ.73,360

Tags:    

மேலும் செய்திகள்