வரலாறு காணாத உச்சம் தொட்ட தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது.;

Update:2025-08-07 09:48 IST

சென்னை,

தங்கம் விலை கடந்த மாதம் 23-ம் தேதி புதிய உச்சத்தை தொட்டது. அன்று ஒரு சவரன் தங்கம் வரலாற்றில் முதல் முறையாக ரூ.75 ஆயிரத்து 40க்கு விற்பனையானது. அதன் பின்னர் தொடர்ந்து விலை சற்று குறைந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக விலை அதிகரித்து வந்து நேற்றும் உயர்ந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 370-க்கும், ஒரு பவுன் ரூ.74 ஆயிரத்து 960-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.10-ம், பவுனுக்கு ரூ.80-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 380-க்கும், ஒரு பவுன் ரூ.75 ஆயிரத்து 40-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் ரூ.75 ஆயிரத்தை தாண்டியது. ஏற்கனவே இதற்கு முன்பு கடந்த மாதம் (ஜூலை) 23-ந்தேதி ஒரு பவுன் ரூ.75 ஆயிரத்து 40-க்கும் விற்பனை ஆனதுதான் உச்சபட்ச விலையாக இருந்து வந்தது. நேற்றும் அதே விலையை தங்கம் தொட்டிருந்தது.

இந்நிலையில், சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 அதிகரித்து ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 75 ஆயிரத்து 200க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமிற்கு ரூ. 20 அதிகரித்து ஒருகிராம் தங்கம் ரூ. 9 ஆயிரத்து 400க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன்படி தங்கம் விலை இதுவரை இல்லாத அளவில் உச்சத்தை தொட்டுள்ளது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.127-க்கும், ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 27 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:

07.08.2025 ஒரு சவரன் ரூ. 75,200 (இன்று)

06.08.2025 ஒரு சவரன் ரூ. 75,040 (நேற்று)

05.08.2025 ஒரு சவரன் ரூ. 74,960

04.08.2025 ஒரு சவரன் ரூ.74,360

03.08.2025 ஒரு சவரன் ரூ.74,320

Tags:    

மேலும் செய்திகள்