மீண்டும் இணையும் 'தலைவன் தலைவி' பட கூட்டணி

மீண்டும் விஜய் சேதுபதி இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.;

Update:2025-08-02 11:09 IST

சென்னை,

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை நித்யா மேனன் நடிப்பில் கடந்த 25ந் தேதி வெளியான படம் 'தலைவன் தலைவி'. இதில் யோகி பாபு, தீபா சங்கர், காளி வெங்கட், மைனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

விஜய் சேதுபதி - பாண்டிராஜ் இருவரும் முதல் முறையாக இணைந்துள்ள இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

இந்த நிலையில், தலைவன் தலைவி படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதி இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தினை லைகா புரொடக்சன் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க மணிகண்டன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அறிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்