இப்படி ஒரு கூட்டணி அமையாது.. கூலி படம் குறித்து நெகிழ்ந்த அனிருத்

ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘கூலி’ படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.;

Update:2025-08-02 14:07 IST

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் திரைப்படம் 'கூலி'. இந்தப் படத்தில் அமீர்கான், நாகார்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், சவுபின் ஷாயிர், உபேந்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது. படத்தின் ட்ரெய்லரும் இன்று வெளியக உள்ளது.

ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள 'கூலி' படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. படத்தில் சண்டைக்காட்சிகள் அதிகம் இடம் பெற்று இருப்பதாகவும் அதனால் ஏ சான்றிதழை தணிக்கை குழு அளித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. ரஜினி ரசிகர்கள் மத்தியில் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கூலி படத்தின் திரைக்கதை அழகாக இருப்பதாக அனிருத் கூறியுள்ளார். இது தொடர்பாக பேட்டி ஒன்றில் அனிருத் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் உள்ள சிறந்த இயக்குநர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். அவரது கதையில் ரஜினி இருந்தால் எப்படியிருக்கும் என்பதை இந்த படத்தில் காணலாம். இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. பல நட்சத்திரங்கள் இந்தபடத்தில் நடித்துள்ளனர். இப்படி ஒரு கூட்டணி வேறு எந்தவொரு படத்துக்குமே அமையாது. 'கூலி 'ஒரு புத்திசாலித்தனமான படம். திரைக்கதை அருமையாக உள்ளது." என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்