லண்டன் ஏர்போர்ட்டில் நடிகை ஊர்வசி ரவுதெலாவின் சூட்கேஸ் திருட்டு
அந்த சூட்கேசில் ரூ.70 லட்சம் மதிப்புள்ள நகைகள் இருந்துள்ளது.;
பிரபல இந்தி நடிகை ஊர்வசி ரவுதெலா . தமழ், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள ஊர்வசி ரவுதெலா, அண்மையில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியைப் பார்க்க லண்டன் சென்றார். அப்போது அங்கு கேட்விக் ஏர்போர்ட்டில் பேக்கேஜ் பெல்டில் இருந்து அவருடைய சூட்கேஸ் திருடு போயுள்ளது. இந்த சூட்கேசில் ரூ.70 லட்சம் மதிப்புள்ள நகைகள் இருந்துள்ளது. சூட்கேஸ் திருடுபோனதால் அதிர்ச்சி அடைந்த ஊர்வசி ரவுதெலா,
இது தொடர்பாக எமிரேட்ஸ் விமான நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளார். எனினும், விமான நிறுவனம் தரப்பில் எந்த உதவியும் வரவில்லை என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதளத்தில் ஊர்வசி ரவுதெலா கூறியிருப்பதாவது; பேக்கேஜ் பெல்ட்டில் இருந்து சூட்கேஸ் திருடப்பட்டது வருத்தமளிக்கிறது. விமான நிலைய பாதுகாப்பைக் கேள்விக் குறியாக்கும் செயலாக இதை பார்க்கிறேன்" என்று கூறியுள்ளார். லண்டன் போலீசாரும் எமிரேட்ஸ் விமான நிறுவனமும் இது தொடர்பாக விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.