தேசிய விருது வென்ற ஜி.வி.பிரகாசுக்கு பாடகி சைந்தவி வாழ்த்து

2வது தேசிய விருது பெறும் நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ்-க்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.;

Update:2025-08-02 13:11 IST

சென்னை,

2023ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. தமிழ் சினிமாவை பொறுத்தவை பார்க்கிங் திரைப்படம் மொத்தம் மூன்று தேசிய விருதுகளை அள்ளியிருக்கிறது. வாத்தி படத்துக்கு இசையமைத்தற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை ஜிவி பிரகாஷ் பெற்றிருக்கிறார். அவருக்கு இது இரண்டாவது தேசிய விருது ஆகும்.

இந்த நிலையில், 2வது தேசிய விருது பெறும் நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாசுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பாடகி சைந்தவி ஜி.வி.பிரகாசுக்கு தனது சமூக வலைத்தள பக்கத்தில் வாழ்த்த தெரிவித்துள்ளார்.

அதில், "இரண்டாவது முறையாக சிறந்த இசையமைப்பாளருக்கான விருதைப் பெற்றதில் நான் உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். மதிப்புமிக்க நடுவர் குழு மற்றும் தேர்வுக் குழுவிற்கு எனது மனமார்ந்த நன்றி. இந்த அழகான பயணத்தில் ஒரு பகுதியாக இருந்ததற்காக வாத்தி பட முழு குழுவிற்கும் நன்றி.

இந்தப் படத்திற்காக என்னைத் தேர்ந்தெடுத்த என் சகோதரர் தனுஷுக்கு சிறப்பு நன்றி. இந்தப் படத்திற்கான இசையை எனக்கு வழங்கவும், என்னை நம்பவும் என்னைத் தூண்டிய எனது இயக்குனர் வெங்கி அட்லூரிக்கு ஒரு பெரிய நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்