அதற்காகத்தான் ''மோனிகா'' பாடல்...உண்மையை உடைத்த லோகேஷ் கனகராஜ்

பூஜா ஹெக்டே மற்றும் சவுபின் ஷாஹிர் நடனமாடியிருந்த "மோனிகா" பாடல் தற்போதும் இணையத்தில் வைரலாகி வருகிறது.;

Update:2025-08-02 07:34 IST

சென்னை,

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் ''கூலி'' திரைப்படம் வருகிற 14-ம் தேதி வெளியாக இருக்கிறது.

தமிழ் சினிமாவில் இந்தப் படம் அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலை இப்படத்தின் டிரெய்லர் வெளியாக இருக்கிறது.

பூஜா ஹெக்டே மற்றும் சவுபின் ஷாஹிர் நடனமாடியிருந்த "மோனிகா" பாடல் தற்போதும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் புரமோஷனின்போது லோகேஷ் கனகராஜ் "மோனிகா" பாடலை வணிக நோக்கங்களுக்காக மட்டுமே படத்தில் சேர்த்ததாக தெளிவுபடுத்தினார்.

அவர் கூறுகையில்,' எனது படங்களில் பொதுவாக ஐட்டம் பாடல்கள் இருக்காது. ஆனால், ''கூலி'' படத்தில் ''மோனிகா'' பாடலை வணிக நோக்கங்களுக்காக மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பாடல் படத்தின் வேகத்தைத் தடுக்காது''என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்