மிருணாள் தாகூரின் டாப் 6 திரைப்படங்கள்
மிருணாள் தாகூரின் திரை பயணம் சுவாரசியமாக அமைந்திருக்கிறது.;
சென்னை,
தொலைக்காட்சி தொடர்கள் முதல் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகி வரை, மிருணாள் தாகூரின் திரை பயணம் சுவாரசியமாக அமைந்திருக்கிறது. இந்நிலையில், அவரின் டாப் 6 திரைப்படங்களை தற்போது காண்போம்.
லவ் சோனியா (2018)
இந்தப் படம், இரண்டு சகோதரிகளை பற்றியது. கடனில் சிக்கிய தந்தையால் விற்கப்படும் தனது சகோதரியை மீட்கும் பயணத்தில் ஈடுபடும் ஒரு இளம் பெண்ணைப் பற்றியது.
சூப்பர் 30 (2019)
பாட்னாவில் ஐஐடி மாணவர்களுக்காக சூப்பர் 30 பாடத்தை நடத்தும் கணிதவியலாளர் ஆனந்த் குமாரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு வாழ்க்கை வரலாற்று படம் இது. இதில் ஆனந்தின் காதலியாக மிருணாள் நடித்திருந்தார்.
பாட்லா ஹவுஸ் (2019)
இந்தப் படம், பாட்லா ஹவுஸில் நடந்த பயங்கரவாத என்கவுண்டரைப் பற்றியது. இதில் பிடிஎஸ்டி நோயால் பாதிக்கப்பட்ட போலீஸ் அதிகாரி சஞ்சீவ் குமார் யாதவின் மனைவியாக மிருணாள் நடித்திருந்தார்.
சீதா ராமம் (2022)
இந்தப் படம், ராம் என்ற லெப்டினன்ட் அதிகாரிக்கும், அவருக்கு காதல் கடிதங்களை அனுப்பும் சீதா என்ற பெண்ணுக்கும் இடையிலான காதல் கதையைப் பற்றியது.
ஜெர்சி (2022)
இந்தக் கதை கிரிக்கெட் வீரர் அர்ஜுன் தல்வாரைப் பற்றியது. மிருணாள் தாகூர் இந்தப் படத்தில் அர்ஜுனின் மனைவியாக நடித்திருந்தார்.
ஹாய் நன்னா (2023)
இது மஹி என்ற ஆறு வயது சிறுமியையும் அவளுடைய தந்தையையும் பற்றிய படம். யாசுனா எனும் பெண்ணைத் தற்செயலாக மஹி சந்திக்கிறார். மகியின் தாய் யார் அவருக்கும் யாசுனாவிற்கும் என்ன தொடர்பு என்பதாக கதை உள்ளது.