அமெரிக்கா விதித்த 25 சதவீத வரி: இந்தியாவில் எந்த துறைகளை பாதிக்கும்?

அமெரிக்காவுக்கான வாகனங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் ஏற்றுமதி 2.2 பில்லியன் டாலராக உள்ளது.;

Update:2025-07-31 21:58 IST

வாஷிங்டன்,

இந்தியாவுடன் அமெரிக்கா வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 25 சதவீத வரி விதித்துள்ளது. இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள வரியால் இந்தியாவில் எந்த துறைகள் எல்லாம் பாதிக்கும் என்பது பற்றிய விவரங்கள் வருமாறு;

ஆடை உற்பத்தி துறை, ஸ்மார்ட் போன்கள் , மருந்துப் பொருட்கள், கடல் உணவுப்பொருட்கள், வாகன உதிரிபாகங்கள் ஏற்றுமதி உள்ளிட்ட துறைகளில் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக சொல்வது என்றால், அமெரிக்காவுக்கான வாகனங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் ஏற்றுமதி 2.2 பில்லியன் டாலராக உள்ளது.

இது ஒட்டுமொத்த ஏற்றுமதியான 21.2 பில்லியன் டாலரில் சுமார் 10% ஆகும். எனவே, அமெரிக்காவின் வரி விதிப்பால் இத்துறைகள்தான் அதிகம் பாதிக்கப்படும் என கருதப்படுகிறது. இதற்கேற்ப இத்துறை பங்குகள் பங்குச்சந்தையில் கணிசமான விலை குறைந்து விற்பனையாகின.

Tags:    

மேலும் செய்திகள்