லண்டனில் சீக்கிய வாலிபர் குத்திக்கொலை: 3 பெண்கள் உள்பட 5 பேர் கைது
கொல்லப்பட்ட நபர் இந்தியா வம்சாவளியை சேர்ந்த சீக்கிய இளைஞர் என்பதும் தெரிய வந்தது.;
லண்டன்,
இங்கிலாந்து தலைநகர் லண்டன் இல்போர்டில் உள்ள ஒரு சாலையில் வாலிபர் ஒருவர் கத்திக்குத்து காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். உடனே அவர் ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லப்பட்டு சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில் அவரது பெயர் குர்முக் சிங் (வயது 30) என்பதும், இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கிய இளைஞர் என்பதும் தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக 3 பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களில் 29 வயதுடைய ஒரு இளைஞர், 29, 30 மற்றும் 54 வயதுடைய மூன்று பெண்களும் உள்ளனர்.