சியோல்,
தென்கொரிய முன்னாள் அதிபர் யூன் சுக் இயோல். இவர் கடந்த ஆண்டு அரசாங்கத்தைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் சதி செய்வதாக கூறி ராணுவ அவசர நிலையை அறிவித்தார். இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பின. எனவே அவர் பதவி விலக கோரி லட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இதனையடுத்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் ராணுவ அவசர நிலை செயல்படுத்தியதற்காக அரசியலமைப்பு கோர்ட்டில் அவருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் யூன் சுக் இயோல் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.
இதற்கிடையே தேர்தல் மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகளும் அவர் மீது சுமத்தப்பட்டன. இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு கோர்ட்டு பலமுறை உத்தரவிட்டது. ஆனால் அவர் ஆஜர் ஆகாததால் யூன் சுக் இயோலுக்கு மீண்டும் பிடிவாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.