தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி பள்ளி மாணவன் உயிரிழப்பு

தேனியில் இருந்து மதுரை நோக்கி சென்ற ரெயில் என்ஜின் மோதியதில் பள்ளி மாணவன் உயிரிழந்தான்.;

Update:2025-08-09 19:10 IST

கோப்புப்படம் 

தேனி மதுரை சாலையில் ரெயில்வே தண்டவாளத்தையொட்டி உள்ள அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல். இவர், ஒரு பேக்கரியில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். அவரது மகன் கோகுல் (14 வயது) பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். சில மாதங்களாக கோகுல் பள்ளிக்கு சரிவர செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று பகலில் கோகுல் கடைக்கு செல்வதற்காக அப்பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றான். அப்போது அந்த வழியாக தேனியில் இருந்து மதுரை நோக்கி தண்டவாளத்தை ஆய்வு செய்வற்கான ரெயில் என்ஜின் சென்று கொண்டு இருந்தது. எதிர்பாராதவிதமாக அந்த ரெயில் என்ஜின், கோகுல் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த மாணவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்

இந்த சம்பவம் தொடர்பாக மதுரை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்