சிறுமியை கடத்திச் சென்று பலாத்காரம்: பெயிண்டருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமியை கடத்திச் சென்று பலாத்காரம் செய்த பெயிண்டருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-08-09 21:37 IST

கோப்புப்படம் 

திருச்சியை சேர்ந்தவர் இஸ்மாயில் (37 வயது). பெயிண்டர். கடந்த 2024-ம் ஆண்டு இவர், வேலை தேடி திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதிக்கு வந்தார். அப்போது 16 வயது சிறுமியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக்கூறி இஸ்மாயில் கடத்திச் சென்று விட்டார். இதற்கிடையே சிறுமி மாயமானது குறித்து அறிந்த பெற்றோர் நிலக்கோட்டை போலீசில் புகார் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு சிறுமியை கடத்திச்சென்று இஸ்மாயில் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. பின்னர் அவர் சிறுமியுடன் நிலக்கோட்டை புறநகர் பகுதியில் பதுங்கி இருப்பது குறித்து தகவலறிந்த போலீசார், அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து சிறுமியையும் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். பின்னர் இஸ்மாயில் மீது திண்டுக்கல் விரைவு மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை நீதிபதி சரண் விசாரித்தார். அரசு தரப்பில் வக்கீல் ஜோதி ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்தது.

குற்றம்சாட்டப்பட்ட இஸ்மாயிலுக்கு இந்திய தண்டனை சட்டம் 366-ன்படி (சிறுமியை கடத்திச்செல்லுதல்) 4 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதமும், போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சரண் தீர்ப்பளித்தார். மேலும் தண்டனையை ஏக காலத்தில் அவர் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்