சொல்வதற்கு ஏதுமில்லை: அன்புமணி நடத்திய பொதுக்குழு குறித்த கேள்விக்கு ராமதாஸ் பதில்

பொதுக்குழுவிற்கு தடை கேட்ட ராமதாஸின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.;

Update:2025-08-09 16:13 IST

விழுப்புரம்,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவருடைய மகன் டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், கட்சியின் பொதுக்குழுவை இன்று (சனிக்கிழமை) மாமல்லபுரத்தில் கூட்டுவதாக அன்புமணி அறிவித்தார்.

இந்த பொதுக்குழுவிற்கு தடை கேட்ட ராமதாசின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, திட்டமிட்டபடி அன்புமணி தலைமையில் பொதுக்குழு நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்படன.

பாமக தலைவர் அன்புமணியின் பதவிக்காலம் மேலும் ஒரு ஆண்டு காலம் நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், அன்புமணி நடத்திய பொதுக்குழு குறித்து செய்தியாளர்கள், பாமக நிறுவனர் ராமதாஸிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ராமதாஸ், "சொல்வதற்கு ஏதுமில்லை” என பதிலளித்துவிட்டு சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்