நாகலாந்து கவர்னர் இல.கணேசனுக்கு 2-வது நாளாக மருத்துவமனையில் சிகிச்சை
இல.கணேசனுக்கு சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.;
சென்னை,
நாகாலாந்து மாநிலத்தின் கவர்னராக பதவி வகித்து வருபவர் இல.கணேசன். இவர், சென்னையில் உள்ள தனது வீட்டில் நேற்று திடீரென மயங்கி விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த இல.கணேசனை அவருடைய குடும்பத்தினர் மீட்டு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
ஆஸ்பத்திரியில் மயங்கிய நிலையில் அனுமதிக்கப்பட்ட இல.கணேசன், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் தொடர்ந்து 2-வது நாளாக இல.கணேசன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.