சென்னை: புதிதாக தொடங்கப்பட்ட 55 ஏசி மின்சார பஸ்கள் இயக்கப்படும் வழித்தடங்கள் எவை..?

பெரும்பாக்கம் பணிமனையிலிருந்து முதற்கட்டமாக இயக்கப்படும் 55 தாழ்தள குளிர்சாதன மின்சார பஸ்களின் வழித்தடங்களை எம்.டி.சி. வெளியிட்டுள்ளது.;

Update:2025-08-11 16:14 IST

சென்னை.

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகமானது எரிபொருள் செலவை கட்டுப்படுத்தும் வகையிலும், சென்னையில் காற்று மாசுபாட்டை கணிசமாக குறைக்கும் வகையிலும், பயணிகளுக்கு கூடுதல் வசதி வழங்கும் வகையிலும் தாழ்தள மின்சார பஸ்களை இயக்க முடிவு செய்தது.

அதன்படி உலக வங்கி உதவியுடன் மொத்த விலை ஒப்பந்தத்தின்படி (ஜி.சி.சி.) ஆயிரத்து 225 மின்சார தாழ்தள பஸ்களை வாங்க முடிவு செய்யப்பட்டது. அதில் முதல்கட்டமாக 625 மின்சார பஸ்களுக்கான ஒப்பந்தமானது அசோக் லேலண்ட் நிறுவனத்தின் துணை நிறுவனமான 'ஓம் குளோபல் மொபிலிட்டி' நிறுவனத்துடன் போடப்பட்டு உள்ளது.

இதில் 400 பஸ்கள் ஏ.சி. அல்லாத பஸ்களும், 225 ஏ.சி. பஸ்களும் அடங்கும். இந்த மின்சார பஸ்களை இயக்குவது மற்றும் பராமரிப்பது 'ஓம் குளோபல் மொபிலிட்டி' நிறுவனம்தான். சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் கண்டக்டர்கள் பணியமர்த்தப்பட்டு டிக்கெட் விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருவாய் ஈட்டப்படும். இந்த 625 தாழ்தள மின்சார பஸ்களில் முதல் கட்டமாக 120 மின்சார பஸ்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் ஜூலை 1ம் தேதி (திங்கட்கிழமை) சென்னை வியாசர்பாடி பணிமனையில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து பெரும்பாக்கம் பணிமனையிலிருந்து 55 தாழ்தள மின்சார பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னையில் இன்று பெரும்பாக்கம் பணிமனையிலிருந்து முதற்கட்டமாக இயக்கப்படும் 55 தாழ்தள குளிர்சாதன மின்சார பஸ்களின் வழித்தடங்களை எம்.டி.சி. (MTC) வெளியிட்டுள்ளது.

அதன் விவரம்:-

MAA2: சென்னை விமான நிலையம் - சிறுசேரி ஐடி பூங்கா. பஸ்கள் எண்ணிக்கை: 15

வழி: பல்லாவரம், பல்லாவரம் புதிய மேம்பாலம், வேல்ஸ் பல்கலைக்கழகம், ஈச்சங்காடு, காமாட்சி மருத்துவமனை, துரைப்பாக்கம், காரப்பாக்கம், சோழிங்கநல்லூர், குமரன் நகர், செம்மஞ்சேரி ஆலமரம், நாவலூர், சிப்காட்

95X: கிளாம்பாக்கம் பே.நி. - திருவான்மியூர். பஸ்கள் எண்ணிக்கை: 5

வழி: வண்டலூர் உயிரியல் பூங்கா, வண்டலூர் கேட், பெருங்களத்தூர், இரும்புலியூர், தாம்பரம் கிழக்கு, கான்வென்ட், பல்லவன் நகர், சோழிங்கநல்லூர் ப.யூ. அலுவலகம், காரப்பாக்கம், துரைப்பாக்கம், கந்தன்சாவடி, எஸ்.ஆர்.பி டூல்ஸ்

555S: கிளாம்பாக்கம் பே.நி. - சோழிங்கநல்லூர். பஸ்கள் எண்ணிக்கை: 5

வழி: வண்டலூர் உயிரியல் பூங்கா, கொளப்பாக்கம், வெங்கம்பாக்கம், கண்டிகை, மாம்பாக்கம், புதுபாக்கம், சாமியார் பண்ணை, கேளம்பாக்கம் சாலை சந்திப்பு, இந்துஸ்தான் கல்லூரி, நாவலூர், செம்மஞ்சேரி, குமரன் நகர்

19: தியாகராய நகர் - திருப்போரூர். பஸ்கள் எண்ணிக்கை: 5

வழி: சைதாப்பேட்டை, எஸ்.ஆர்.பி டூல்ஸ், கந்தன்சாவடி, துரைப்பாக்கம், காரப்பாக்கம், சோழிங்கநல்லூர் ப.யூ. அலுவலகம், குமரன் நகர், செம்மஞ்சேரி, நாவலூர், இந்துஸ்தான் கல்லூரி, கேளம்பாக்கம், கோமான் நகர் சாலை சந்திப்பு, காலவாக்க

102: பிராட்வே - கேளம்பாக்கம். பஸ்கள் எண்ணிக்கை: 5

வழி: தலைமைச் செயலகம், சேப்பாக்கம், இராணி மேரி கல்லூரி, ஏ.எம்.எஸ் மருத்துவமனை, அடையார் ஓ.டி, இந்திரா நகர், எஸ்.ஆர்.பி டூல்ஸ், கந்தன்சாவடி, துரைப்பாக்கம், காரப்பாக்கம், சோழிங்கநல்லூர் ப.யூ. அலுவலகம், குமரன் நகர், செம்மஞ்சேரி, நாவலூர், இந்துஸ்தான் கல்லூரி

570/570S: கோயம்பேடு - கேளம்பாக்கம் / சிறுசேரி ஐடி பூங்கா. பஸ்கள் எண்ணிக்கை: 20

வழி: எம்.எம்.டி.ஏ காலனி, வடபழனி, அசோக் பில்லர், காசி தியேட்டர், ஈக்காடுதாங்கல், CIPET, கிண்டி பே.நி., கான்கோட் / வேளச்சேரி (Check Post), குருநானக் கல்லூரி, வேளச்சேரி, எஸ்.ஆர்.பி டூல்ஸ், கந்தன்சாவடி, துரைப்பாக்கம், காரப்பாக்கம், சோழிங்கநல்லூர் ப.யூ. அலுவலகம், குமரன் நகர், செம்மஞ்சேரி, நாவலூர் (570: இந்துஸ்தான் கல்லூரி / 570S: சிப்காட்)




 


Tags:    

மேலும் செய்திகள்