உலக பணக்காரர்கள் பட்டியல்: எலான் மஸ்க் தொடர்ந்து முதலிடம்

2-வது இடத்தில் லாரி எலிசனும், 3-வது இடத்தில் மார்க் ஜுக்கர்பெர்க்கும் உள்ளனர்.;

Update:2025-08-02 20:38 IST

வாஷிங்டன்,

அமெரிக்க பங்குச்சந்தை குறியீடுகளை மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் புதிய உச்சங்களுக்கு கொண்டு சென்றுள்ளன. இதன் அடிப்படையில் உலகின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு இருக்கிறது. இதில் எலான் மஸ்க் 401 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் (இந்திய மதிப்பில் ரூ.34 லட்சம் கோடி) முதலிடத்தில் உள்ளார்.

2-வது இடத்தில் லாரி எலிசனும், 3-வது இடத்தில் மார்க் ஜுக்கர்பெர்க்கும் உள்ளனர். ஜெப் பெசோஸ், லாரி பேஜ், ஜென்சன் ஹுவாங், செர்ஜி பிரின், ஸ்டீவ் பால்மர், வாரன் பபெட், பெர்னார்ட் அர்னால்ட் ஆகியோர் முறையே 4 முதல் 10 இடங்களில் உள்ளனர். நேற்றைய தேதி நிலவரப்படி வெளியிடப்பட்ட உலகின் முதல் 10 பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 9 பேர் அமெரிக்கர்கள் ஆவர். பெர்னார்ட் அர்னால்ட் பிரான்சை  சேர்ந்தவர்.

Tags:    

மேலும் செய்திகள்