இந்தியா நல்ல முடிவை எடுத்துள்ளதாக கேள்விப்பட்டேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டி
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்னெய் இறக்குமதியை இந்தியா கைவிட வேண்டும் என்றும் டிரம்ப் எச்சரித்து வருகிறார்;
வாஷிங்டன்,
அமெரிக்க அதிபராக டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றார். அதைத்தொடர்ந்து, அமெரிக்கா மீது பிற நாடுகள் விதிக்கும் வரியை போலவே, அதே அளவுக்கு வரி விதிக்கப்போவதாக அறிவித்தார். கடந்த ஏப்ரல் 2-ந் தேதி, இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரிவிதிப்பை அறிவித்தார்.
பின்னர், வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள கால அவகாசம் அளிக்கும் வகையில், வரிவிதிப்பை 90 நாட்கள் ஒத்திவைத்தார். கடந்த ஜூலை 9-ந் தேதி அமலுக்கு வருவதாக இருந்த வரிவிதிப்பு, ஆகஸ்டு 1-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதில் இழுபறி நீடித்த நிலையில், இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீதத்தை டிரம்ப் அறிவித்தார்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்னெய் இறக்குமதியை இந்தியா கைவிட வேண்டும் என்றும் டிரம்ப் எச்சரித்து வருகிறார். இந்த நிலையில், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணய் வாங்கப்போது இல்லை என இந்தியா முடிவு செய்தூ இருப்பதாக டிரம்ப் கூறியுள்ளார். இது தொடர்பாக டிரம்ப் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இந்தியா இனி ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்போவதில்லை என்று தான் கேள்விப்பட்டேன். இது ஒரு "நல்ல நடவடிக்கை" என்று பாராட்டிய டிரம்ப், எனினும் இந்த விவகாரம் குறித்து தனக்கு உறுதியாக எதுவும் தெரியவில்லை" என்றார்.