பழிக்குப் பழி? - மதுரையில் ரவுடி வெட்டிக் கொலை
பழிக்குப்பழியாக கொலை நடந்ததா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
மதுரை,
மதுரை மாவட்டம் பெருங்குடி அருகே உள்ள அப்மேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் கருமலை. கடந்த ஆண்டு முனீஸ்வரன் என்பவரின் கொலையில் இவர், இவரது அண்ணன் உட்பட 6 பேர் கைதுசெய்யப்பட்டனர். இந்த வழக்கில் தண்டனை முடிந்து கருமலை மற்றொரு பகுதியில் வசித்து வந்தார்.
இந்த நிலையில், குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக கருமலை மீண்டும் அம்பேத்கர் நகர் பகுதிக்கு வந்துள்ளார். இதனை நோட்டமிட்ட 6 பேர் கொண்ட கும்பல், கருமலையை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர். மேலும், அவருடன் இருந்த நண்பரான பாலமுருகன் என்பவரையும் சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயங்களுடன் பாலமுருகன் தப்பியோடினார். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பாக தகவல் அறிந்த போலீசார், கருமலையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பழிக்குப்பழியாக இந்த கொலை சம்பவம் நடந்ததா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.