ஜெயலலிதா என் ரோல் மாடல் - பிரேமலதா விஜயகாந்த்

கேப்டனை மானசீக குரு என சொல்பவர்கள் அவரது படத்தை புகைப்படத்தை பயன்படுத்தலாம் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.;

Update:2025-08-11 14:39 IST

சென்னை,

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் 10-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களுடன் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் தொடரும் என தூய்மைப்பணியாளர்கள் கூறினர். அரசு தெரிவித்தப்படி பணி நிரந்தரம், ரூ.23,000 ஊதியத்தை வழங்க வேண்டும். எல்லாம் தனியார் மயம் என்றால் ஆட்சியையும் தனியார் மயமாக்கி விடலாமா? வரி வசூலிப்பது அரசு, அரசை தனியார்மயமாக்க முடியுமா? தனியார் மயமாக்குவதை தேமுதிக கண்டிக்கிறது.

ஜெயலலிதா ஒரு சாதனைப்பெண்மணி, இரும்புப்பெண்மணி. ஜெயலலிதா இடத்தை வேறு யாரும் நிரப்ப முடியாது. ஒரு எம்.ஜி.ஆர், ஒரு ஜெயலலிதாதான். ஜெயலலிதா போன்று சிங்கப்பெண்ணாக நான் இருப்பதாக சுதீஷ் கூறியிருந்தார். தமிழ்நாட்டில் பல சவால்களை சந்தித்த ஜெயலலிதா என் ரோல் மாடல் என கூறியிருக்கிறேன். எம்.ஜி.ஆரை மானசீக குருவாக அறிவித்தவர் விஜயகாந்த். கேப்டனை மானசீக குரு என சொல்பவர்கள் அவரது படத்தை புகைப்படத்தை பயன்படுத்தலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜெயலலிதாவுடன் பிரேமலதா உள்ளதுபோல் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் வெளியிட்ட புகைப்படத்தால் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன் பிரேமலதா, சுதீஷை அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்