திருச்செந்தூர் கோவிலில் 6 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடினர்.;

Update:2025-07-28 02:51 IST

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். திருவிழா மற்றும் சில முக்கிய தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். கோவிலில் கடந்த 7-ந் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்த பின்னர் தற்போது மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாரதனையும், தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் வழக்கம் போல் நடந்தன. நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடினர். கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.சுமார் 6 மணி நேரம் காத்து நின்ற பிறகே சாமி தரிசனம் செய்ய முடிந்தது. இதனால் கோவில் வளாகம், பொது தரிசனம், 100 ரூபாய் கட்டண தரிசனம் செல்லக்கூடிய வரிசை என அனைத்து பகுதிகளிலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

Tags:    

மேலும் செய்திகள்