மத்திய உளவுத்துறையில் வேலை: 3,717 பணியிடங்கள்- விண்ணப்பிப்பது எப்படி?

உளவுத்துறையில் காலியாக உள்ள 3,717 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.;

Update:2025-07-18 10:45 IST

representation image (Meta AI)

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உளவுத்துறை நாட்டின் பாதுகாப்புக்கு மிக முக்கியமான அமைப்புகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. உளவுத்துறையில் காலியாக உள்ள 3,717 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:

பதவியின் பெயர்: உதவி மத்திய புலனாய்வு அதிகாரி (ACIO) Grade 2

காலிப்பணியிடங்கள்: 3,717

கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருந்தால் போதும். கணிணி பற்றிய அடிப்படை அறிவு அவசியம்.

வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு சலுகை அளிக்கப்படும்.

சம்பளம்: ரூ. Rs.44,900 – 1,42,400 வரை

தேர்வு முறை: இரண்டு கட்ட எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வர்க தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வுக்கட்டணம்: ரூ.650 ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.550 கட்டணம் ஆகும்.

விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கும் நாள்: 19.07.2025, அவகாசம் முடியும் நாள்; 10.08.2025

அதிகாரபூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்வு அறிவிப்பினை பார்க்க: https://www.mha.gov.in/en/notifications/vacancies

Tags:    

மேலும் செய்திகள்