தமிழ்நாடு அரசு எம் ஜி ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் வழங்கும் படிப்புகள்...!

சினிமா மக்களிடமிருந்து பிரிக்க முடியாத சொல்லாக இன்று மாறிவிட்டது.;

Update:2025-07-21 08:20 IST

சினிமா மக்களிடமிருந்து பிரிக்க முடியாத சொல்லாக இன்று மாறிவிட்டது. "செய்யும் தொழிலே தெய்வம் "என்பார்கள் .

எந்தத் தொழிலை செய்தாலும் இழிவு இல்லை . நமது மனதுக்கு பிடித்த நன்மை பயக்கத்தக்க இனிய தொழில்கள் என்றுமே இதயத்திற்கு இதம் சேர்ப்பவை.

தமிழ்நாடு அரசு எம் ஜி ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் சென்னையில் இயங்கி வருகிறது. இது தமிழக அரசு நிறுவனமாகும்.

திரைப்படத் துறையில் மாணவர்களுக்கு போதிய பயிற்சி அளிப்பதும், தொலைக்காட்சி பற்றிய விரிவான விளக்கங்களை வழங்கி பயிற்சிகள் வழங்குவதும் இந்த நிறுவனத்தின் முக்கிய நோக்கமாக திகழ்கிறது.

இவை தவிர, இந்த துறையில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்குவதும், திரைப்படம் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகளில் ஈடுபட போதிய வசதிகள் வழங்குவதும், திரைப்படத்துறையை பொழுதுபோக்கு சாதனமாகவும் ,சிறந்த கல்வி வழங்கும் சாதனமாகவும் மக்கள் பயன்படுத்தும் வகையில் முயற்சிகள் எடுப்பதும் இந்த திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் நோக்கமாக அமைகிறது.

இங்கு வழங்கப்படும் படிப்புகள் தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மியூசிக் மற்றும் பைனான்ஸ் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்றதாகும்.

வழங்கப்படும் படிப்புகள்.

1. பேச்சுலர் ஆஃப் விசுவல் ஆர்ட்ஸ் (சினிமட்டோகிராபி) (BACHELOR OF VISUAL ARTS (CINEMATOGRAPHY).

இந்தப் படிப்பு நான்கு வருட படிப்பாகும்.

பிளஸ் 2 தேர்வில் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடத்தை விருப்ப பாடமாக தேர்ந்தெடுத்து படித்தவர்கள், இந்த படிப்பில் சேர்ந்து படிக்கலாம். மேலும் , வொகேஷ்னல் கோர்சஸ் (VOCATIONAL COURSES) பிரிவில் போட்டோகிராபி என்னும் பாடத்தை சிறப்பு பாடமாக கற்றவர்களும் இந்த படிப்பில் சேர தகுதி படைத்தவர்கள் ஆவார்கள்.

இவை தவிர டிப்ளமோ இன் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் அல்லது டிப்ளமோ இன் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் படிப்பை முடித்தவர்களும் இந்த படிப்பில் சேர்ந்து படிக்கலாம்.

2. பேச்சுலர் ஆஃப் விசுவல் ஆர்ட்ஸ் (டிஜிட்டல் இன்டர்மீடியட்) (BACHELOR OF VISUAL ARTS ( DIGITAL INTERMEDIATE).

இந்தப் படிப்பு நான்கு வருட படிப்பாகும்.

பிளஸ் 2 தேர்வில் இயற்பியல்(PHYSICS )மற்றும் வேதியியல் (CHEMISTRY)பாடத்தை விருப்ப பாடமாக தேர்ந்தெடுத்து படித்தவர்கள் இந்த படிப்பில் சேர்ந்து படிக்கலாம்.

மேலும், வொகேஷ்னல் கோர்சஸ் (VOCATIONAL COURSES) பிரிவில் போட்டோகிராபி என்னும் பாடத்தை சிறப்பு பாடமாக கற்றவர்களும் இந்த படிப்பில் சேர தகுதி படைத்தவர்கள் ஆவார்கள்.

இவை தவிர, டிப்ளமோ இன் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் அல்லது டிப்ளமோ இன் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் படிப்பை முடித்தவர்களும் இந்த படிப்பில் சேர்ந்து படிக்கலாம்.

3. பேச்சுலர் ஆஃப் விசுவல் ஆர்ட்ஸ் (ஆடியோ கிராபி) (BACHELOR OF VISUAL ARTS (AUDIOGRAPHY).

இது நான்கு வருட படிப்பாகும். பிளஸ் 2 தேர்வில் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடத்தை விருப்ப பாடமாக தேர்ந்தெடுத்து படித்தவர்கள் இந்த படிப்பில் சேர்ந்து படிக்கலாம்.

மேலும் ,வொகேஷனல் கோர்சஸ் (VOCATIONAL COURSES) பிரிவில் ரேடியோ மற்றும் டி.வி என்னும் பாடத்தை சிறப்பு பாடமாக கற்றவர்களும் இந்த படிப்பில் சேர தகுதி படைத்தவர்கள் ஆவார்கள். அல்லது டொமஸ்டிக் எலக்ட்ரானிக் எக்யூப்மெண்ட்ஸ் என்னும் சிறப்பு பாடத்தை படித்தவர்களும் இந்த படிப்பில் சேர்ந்து படிக்கலாம்.

இவை தவிர ,டிப்ளமோ இன் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் அல்லது டிப்ளமோ இன் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் படிப்பை முடித்தவர்களும் இந்த படிப்பில் சேர்ந்து படிக்கலாம்.

4. பேச்சுலர் ஆஃப் விசுவல் ஆர்ட்ஸ் (டைரக்சன் அண்ட் ஸ்கிரீன் ப்ளே ரைட்டிங் கோர்ஸ்). (BACHELOR OF VISUAL ARTS (DIRECTION AND SCREEN PLAY WRITING COURSE ).

பிளஸ் 2 படிப்பில் எந்த பாடப்பிரிவை எடுத்து படித்திருந்தாலும் இந்த படிப்பில் சேர்ந்து படிக்கலாம். இது நான்கு வருட படிப்பாகும்.

5. பேச்சுலர் ஆஃப் விசுவல் ஆர்ட்ஸ் (பிலிம் எடிட்டிங் ) BACHELOR OF VISUAL ARTS (FILM EDITING).

இந்த படிப்பு நான்கு வருட படிப்பாகும். பிளஸ் 2 படிப்பில் எந்த பிரிவை எடுத்து தேர்ச்சி பெற்றிருந்தாலும் இந்த படிப்பில் சேர்ந்து படிக்கலாம்.

6. பேச்சுலர் ஆஃப் விசுவல் ஆர்ட்ஸ் (அனிமேஷன் & விசுவல் எபட்க்ஸ்) (BACHELOR OF VISUAL ARTS (ANIMATION & VISUAL EFFECTS ).

இந்த படிப்பு நான்கு ஆண்டுகள் படிப்பாகும். பிளஸ் 2 தேர்வில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவை படித்து வெற்றி பெற்றவர்கள் இந்த படிப்பில் சேர தகுதி படைத்தவர்கள் ஆவார்கள். ஒவ்வொரு பட்டப் படிப்பிலும் ஒரு இடம் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மாணவர் சேர்க்கை

சினிமட்டோகிராபி, டிஜிட்டல் இன்டர்மீடியட், ஆடியோகிராபி மற்றும் பிலிம் எடிட்டிங் ஆகிய பட்டப் படிப்புகளில் சேர விரும்புபவர்கள் தகுதி தேர்வில் (QUALIFING EXAM) 60 சதவீத மதிப்பெண்கள் கணக்கிடப்படும்

மேலும் ஆப்டிடியூட் டெஸ்ட் என்னும் தேர்வுக்கு 25 சதவீத மதிப்பெண்களும் ,நேர்முகத் தேர்வுக்கு 15 சதவீத மதிப்பெண்களும் ஒதுக்கப்பட்டு தரவரிசை அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் .

அனிமேஷன் மற்றும் விஷுவல் எபெக்ட்ஸ் படிப்பில் மொத்தம் உளள 100 மதிப்பெண்களில் 40 சதவீத மதிப்பெண்கள் தகுதித் தேர்வுக்கும் (QUALIFING EXAM),40 சதவீத மதிப்பெண்கள் ஆப்டிடியூட் டெஸ்ட் க்கும் மீதமுள்ள 20% மதிப்பெண்கள் நேர்முகத் தேர்வுக்கும் வழங்கப்படும். இந்த மூன்றையும் சேர்த்து தர வரிசைப்படுத்தி ரேங்க் அடிப்படையில் மாணவர் சேர்க்க நடைபெறும்.

பிளஸ் டூ தேர்வு மதிப்பெண்கள்.

இந்த நிறுவனம் வழங்கும் பட்டப் படிப்புகளில் சேர விரும்புபவர்கள் பிளஸ் டூ தேர்வில் (தகுதி தேர்வு) (QUALIFING EXAM) குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும்.

ஆனால், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் இந்த பிளஸ் டூ தேர்வில் வெற்றி பெற்றால் போதும்.

வயது வரம்பு.

இங்குள்ள பட்ட படிப்பில் சேர விரும்புபவர்களுக்கு அதிகபட்ச வயது 24 ஆகும். ஆனால் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் 26 வயது வரை இந்த நிறுவனம் நடத்தும் படிப்புகளில் சேர்ந்து கொள்ளலாம்.

படிப்பு கட்டணம் (TUITION FEE)

இந்த நிறுவனம் நடத்தும் பட்டப் படிப்புகளில் சேரும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களும், மாற்றுத்திறனாளிகளும் கல்விக் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

மேலும் விவரங்களுக்கு..

TAMIL NADU GOVERNMENT M.G.R FILM & TELIVISION INSTITUTE

C.I.T. CAMPUS,

THARAMANI,

CHENNAI -600113.




 


Tags:    

மேலும் செய்திகள்