உழைப்புக்கு மேல் என் வெற்றிக்கு ஒரு ரகசியம் உண்டு: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
எவ்வளவு பணம், புகழ் இருந்தாலும் வீட்டில் நிம்மதி, வெளியில் கவுரவம் இல்லையெனில் எதுவுமே இல்லை என்று ரஜினிகாந்த் கூறினார்.;
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, ஆமீர்கான், நாகார்ஜுனா உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'கூலி' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது
இந்நிலையில் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது: - உழைப்புக்கு மேல் என் வெற்றிக்கு ஒரு ரகசியம் உண்டு. அதுதான் இறைவனின் குரல். இறைவனின் குரலையும் உங்கள் குரலையும் பிரித்துப்பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும். எவ்வளவு பணம், புகழ் இருந்தாலும் வீட்டில் நிம்மதி, வெளியில் கவுரவம் இல்லையெனில் எதுவுமே இல்லை.
சத்யராஜ் இந்தப் படத்தில் நடிக்கிறார் என்று லோகேஷ் சொன்னார். நான் சத்யராஜ் நடிக்கிறாரா அவரிடம் கேளுங்கள் என்று சொன்னேன். அதற்கு அவர் ரஜினிகாந்திடம் கேளுங்கள் என்று சொன்னார் என்று தெரிவித்தார். சிவாஜி படத்தில் நான் என்ன சம்பளம் வாங்கினேனோ அந்த சம்பளத்தை கொடுக்கிறோம் என சொன்னோம். ஆனால் நடிக்க மாட்டேன் என சத்யராஜ் கூறிவிட்டார். எனக்கும் சத்யராஜுக்கும் கருத்தியல் ரீதியா முரண்பாடு இருக்கலாம்.. ஆனால் அவர் மனசுல பட்டதை சொல்லிட்டு போயிடுவாரு.. மனசுல பட்டதை சொல்றவங்கள நம்பிடலாம்.. ஆனா உள்ளேயே வச்சிட்டு இருக்குறவங்கள நம்ப முடியாது" என்றார்.