'கூலி' டிரெய்லருக்கு தனுஷ் கொடுத்த ரியாக்சன் - வைரல்
''கூலி'' திரைப்படம் வருகிற 14-ம் தேதி வெளியாக இருக்கிறது.;
சென்னை,
''கூலி'' டிரெய்லருக்கு நடிகர் தனுஷ் கொடுத்த ரியாக்சன் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் ''கூலி'' திரைப்படம் வருகிற 14-ம் தேதி வெளியாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் இந்தப் படம் அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே 'கூலி' படத்தின் மீது எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், அதனை தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர் பல மடங்கு அதிகரித்துள்ளது.
கூலி டிரெய்லரை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், நடிகர் தனுஷும் தனது சமூக வலைதள பக்கத்தில் தனது உற்சாகத்தை பகிர்ந்துள்ளார். அதன்படி, ''கூலி'' பட டிரெய்லரை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து 'தலைவா' என குறிப்பிட்டு கண்ணில் ஹார்ட் பறக்கும் எமோஜிகளை பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.