''கிங்டம்'' படம் திரையிடப்பட்ட தியேட்டர் முற்றுகை
விஜய் தேவரகொண்டா நடிப்பில் நேற்று முன்தினம் தியேட்டர்களில் வெளியான படம் 'கிங்டம்';
சென்னை,
சென்னை அம்பத்தூரில் கிங்டம் படம் திரையிடப்பட்ட தியேட்டரை நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டுள்ளனர்.
படத்தில் இலங்கை தமிழர்களை கொடியவர்கள் போன்று சித்தரித்து காட்சிகள் உள்ளதாகவும் தமிழ் கடவுளான முருகன் பெயரை வில்லனுக்கு சூட்டி இருப்பதாகவும் நாதவினர் குற்றம் சாட்டி உள்ளனர்.
இதனால் கிங்டம் படத்தை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சியினர் வலியுறுத்தி தியேட்டரை முற்றுகையிட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
கவுதம் தின்னனூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் நேற்று முன்தினம் தியேட்டர்களில் வெளியான படம் 'கிங்டம்'. இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து பாக்யஸ்ரீ போர்ஸ், சத்யதேவ் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். ஆக்சன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.