''கூலி'' போஸ்டர் காப்பியா?...ஹாலிவுட் படங்களுடன் ஒப்பிடும் ரசிகர்கள்

'கூலி' படத்தின் சில போஸ்டர்கள் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.;

Update:2025-08-03 12:30 IST

சென்னை,

சமூக ஊடக பயனர்கள் 'கூலி' படத்தின் போஸ்டர்களை 'மேடம் வெப்' மற்றும் 'கிளாஸ்' போன்ற ஹாலிவுட் படங்களுடன் ஒப்பிட்டுள்ளனர்.

லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவுள்ளது, அதன் டிரெய்லர் நேற்று மாலை சென்னையில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் படத்தின் சில போஸ்டர்கள் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக படத்தின் இரண்டு போஸ்டர்கள் ஹாலிவுட் திரைப்படத்தின் போஸ்டர்களை பார்த்து காப்பி அடித்துள்ளதாக விமர்சனத்திற்குள்ளாகி உள்ளது. 'மேடம் வெப்' மற்றும் 'கிளாஸ்' போன்ற ஹாலிவுட் படங்களுடன் ஒப்பிட்டப்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில், சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, சபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், அமீர் கான் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இதனால் படத்தின் மீது இந்தியா முழுவதும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்