ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 20 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று காலை 18 ஆயிரம் கன அடியாக வந்தது.;

Update:2025-08-07 18:44 IST

ஒகேனக்கல், ‌

கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணைக்கும், கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து ள்ளது. இந்த இரு அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று காலை 18 ஆயிரம் கன அடியாக வந்தது. தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்துள்ளது.இதன் காரணமாக இன்று காலை 8 மணி நில வரப்படி 20 ஆயிரம் கன அடியாக தண்ணீர் அதிகரித்து வந்தது.இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்த ருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்