கீழடியை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர் - எடப்பாடி பழனிசாமி

கீழடி தொடர்பாக மாநில அரசு கேட்பவைக்கு நாங்கள் துணை நிற்போம் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.;

Update:2025-07-30 15:47 IST

சிவகங்கை,

தமிழ்நாட்டில் 2026 காண சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த நிலையில், அதிமுக வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது. மேலும் கட்சியை வலுப்படுத்தும் கட்சியை வலுப்படுத்தும் நோக்கிலும், திமுக அரசு செயல்படுத்தாத வாக்குறுதிகள் மற்றும் குறைகள் குறித்து மக்களிடம் எடுத்துரைக்கும் வகையில்'' தமிழகத்தை மீட்போம் மக்களை காப்போம்.. ''என்ற பெயரில் மாவட்டம் வாரியாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்திற்கு தற்பொழுது எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.

இந்தநிலையில், கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்ட பின் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

இப்போது கீழடியை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர். தமிழனின் பெருமையை பறைசாற்றுவதே எங்கள் நோக்கம். கீழடி தொடர்பாக மத்திய அரசு கேட்கும் விளக்கத்தை மாநில அரசு கொடுக்க வேண்டும். என்ன விளக்கம் என்பதில் வெளிப்படையாக எதுவும் சொல்லப்படவில்லை என்பதால், இரு பக்கமும் என்ன முரண் நிலவுகிறது என தெரியவில்லை. இருப்பினும் கீழடி தொடர்பாக மாநில அரசு கேட்பவைக்கு நாங்கள் துணை நிற்போம் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்