ரூ.20 ஆயிரம் கோடி நிதி திரட்ட ஸ்டேட் வங்கி முடிவு

தேசிய பங்குச்சந்தையில் பாரத ஸ்டேட் வங்கியின் பங்குகள் 2 சதவீதம் உயர்ந்தன;

Update:2025-07-17 13:48 IST

கடன் பத்திரங்கள் வெளியிடுவதன் மூலம் ரூ.20 ஆயிரம் கோடி நிதி திரட்ட பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு இந்த பத்திரங்கள் வெளியிடப்படும்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து, தேசிய பங்குச்சந்தையில் பாரத ஸ்டேட் வங்கியின் பங்குகள் 2 சதவீதம் உயர்ந்தன. அதன் பங்கு விலை ரூ.834 ஆக அதிகரித்தது. கடந்த ஆண்டு, ஸ்டேட் வங்கி பங்குகள் 6 சதவீதம் சரிவை சந்தித்தன. மற்ற பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை விட பின்தங்கியே இருந்தன. இந்த பின்னணியில், அதன் பங்குகள் விலை உயர்ந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்