தமிழகத்தில் ஆகஸ்ட், செப்டம்பரில் இயல்புக்கு அதிகமாக மழை பெய்யும்: இந்திய வானிலை மையம்
தமிழகத்தில் ஆகஸ்ட், செப்டம்பரில் இயல்புக்கு அதிகமாக மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.;
புதுடெல்லி,
நம் நாட்டிற்கு அதிக மழைப்பொழிவு தென்மேற்கு பருவமழையின் மூலமே கிடைக்கிறது. கடந்த மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், படிப்படியாக நாடு முழுவதும் பருவமழை தொடங்கியது.
ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவமழையின் முதல் பாதியில் நாடு இயல்பை விட அதிகமான மழையைப் பெற்றது. இமாச்சலப் பிரதேசம், திடீர் வெள்ளத்தை சந்தித்தது. பருவமழையின் 2வது பாதியிலும் (ஆகஸ்ட்,செப்டம்பர்) இயல்பைக்காட்டிலும் அதிகமான மழை கிடைக்க வாய்ப்புள்ளதாக இன்று தகவல் வெளியாகி உள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஆகஸ்ட் மாதத்தில் இயல்பான மழை பெய்ய வாய்ப்புள்ளது. செப்டம்பர் மாத மழைப்பொழிவு இயல்பை விட அதிகமாக இருக்கும். தமிழகத்தில் ஆகஸ்ட், செப்டம்பரில் இயல்புக்கு அதிகமாக மழை பெய்யும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.