தமிழகத்தில் 7 இடங்களில் இன்று சதமடித்த வெயில்

மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட 7 இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவாகி உள்ளது.;

Update:2025-07-31 21:12 IST

சென்னை,

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்து வந்தாலும், பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. பல இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் பதிவாகி வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் இன்று 7 இடங்களில் வெயில் 100 டிகிரிக்கு மேல் பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன்படி மதுரையில் 106.34 டிகிரி, தூத்துக்குடியில் 101.84 டிகிரி, நாகை மற்றும் திருச்சியில் 101.3 டிகிரி, மதுரையில் 101.12 டிகிரி, கரூர் பரமத்தி மற்றும் தஞ்சையில் 100.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 6-ந்தேதி வரை ஓரிரு பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்