சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை

வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.;

Update:2025-08-17 18:55 IST

மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று மழை பெய்து வருகிறது. பலத்த காற்றுடன் எழும்பூர், புரசைவாக்கம், அரும்பாக்கம், கிண்டி, சைதப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல் உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதேபோல், செங்கல்பட்டு, திருநின்றவூர், நன்மங்கலம், தாம்பரம் உள்பட புறநகர் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்