சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.;
சென்னை,
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது.
சென்னை எழும்பூர், சென்ட்ரல், வேப்பேரி, மெரினா ஆகிய பகுதிகளிலும், தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், குரோம்பேட்டை, பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.