திருமாவளவனை விரைவில் சந்தித்து பேசுவேன்; திருத்துவேன் - கே.பி.ராமலிங்கம்
திருமாவளவன் எனக்கு மிகச்சிறந்த நண்பர் என்று பாஜக துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் கூறினார்.;
நாமக்கல்,
நாமக்கல் அதிமுக மாவட்ட அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் தங்கமணியை பாஜக சேலம் மண்டல பெருங்கோட்ட பொறுப்பாளரும், மாநில துணைத் தலைவருமான கே.பி. ராமலிங்கம் சந்தித்துப் பேசினார்.
அதன்பின்னர் கே.பி. ராமலிங்கம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
2026 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதியிலும் பாஜக-அதிமுக கூட்டணி வெற்றி பெறும். திமுக எந்த சந்திப்பு நடத்தினாலும் மக்களிடம் எடுபடாது. தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் அதிமுக ஆட்சி அமைக்கும்.
இன்னும் 10, 15 நாட்களில் விசிக தலைவர் திருமாவளவனை சந்தித்து பேச உள்ளேன். திருமாவளவன் எனக்கு மிகச்சிறந்த நண்பர். அவரை திருத்த உள்ளேன். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சந்தித்து நல்ல பலனை தர உள்ளேன். திமுக கூட்டணியில் திருமாவளவன் இருந்தால் தலித் மக்கள் பாதிக்கப்படுவர்.
ஒன்று அல்லது இரண்டு சீட்களுக்காக வி.சி.க இளைஞர்களை திருமாவளவன் தவறாக வழிநடத்திவிடக்கூடாது. திமுக உடன் சேர்ந்து தலித் மக்களுக்கு துரோகம் செய்கிறார். அந்த அணியில் இருந்து எங்கள் அணியில் இழுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம், இவ்வாறு அவர் கூறினார்.